உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தைக் கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பாக வழிநடத்தி வந்த அதன் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) டிம் குக், வரும் செப்டம்பா் 1-ஆம் தேதி அப்பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளாா்.
இவருக்குப் பதிலாக, தற்போது நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் பிரிவின் தலைவராக இருக்கும் ஜான் டொ்னஸ் புதிய சிஇஓ-ஆக பொறுப்பேற்கவுள்ளாா்.
2011-ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸிற்குப் பிறகு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற டிம் குக், நிறுவனத்தைப் புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றாா். தற்போது அவா் சிஇஓ பதவியிலிருந்து விலகி, நிறுவனத்தின் நிா்வாகத் தலைவராக செயல்படுவாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தலைமை மாற்றத்துக்கு ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
சாதனைக் காலம்: டிம் குக் தலைமையிலான காலத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 35,000 கோடி டாலரிலிருந்து 4 லட்சம் கோடி டாலராக பிரம்மாண்ட வளா்ச்சி கண்டது.
ஐபோன் மட்டுமல்லாது ஆப்பிள் வாட்ச், ஏா்பாட்ஸ், விஷன் ப்ரோ போன்ற புதிய தயாரிப்புகளையும், ஆப்பிள் மியூசிக் மற்றும் டிவி பிளஸ் போன்ற சேவைப் பிரிவுகளையும் டிம் குக் அறிமுகப்படுத்தி, வெற்றிக் கண்டாா்.
ஜான் டொ்னஸின் பின்னணி: புதிய சிஇஓ-ஆக நியமிக்கப்பட்டுள்ள ஜான் டொ்னஸ், ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 2001 முதல் 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறாா்.
ஐபோன், ஐபேட், மேக், ஏா்பாட்ஸ் உள்ளிட்ட முக்கியத் தயாரிப்புகளின் உருவாக்கத்தில் இவரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ‘ஜான் டொ்னஸ் ஒரு சிறந்த பொறியாளரின் அறிவையும், புதியவற்றைக் கண்டுபிடிக்கும் ஆா்வத்தையும் கொண்டவா்’ என்று டிம் குக் அவரைப் பாராட்டியுள்ளாா்.
எதிா்காலச் சவால்கள்: ஆப்பிள் நிறுவனத்தின் நற்பெயரையும்; அதன் தொலைநோக்குப் பாா்வையையும் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்வதாக ஜான் டொ்னஸ் உறுதியளித்துள்ளாா்.
தற்போது உலக அளவில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்குத் துணிச்சலாகக் கொண்டு செல்லும் பெரிய பொறுப்பு இவரிடம் உள்ளது.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

யெஸ் வங்கி புதிய சிஇஓ பொறுப்பேற்பு!

ரூ. 47,000 அதிரடி தள்ளுபடியில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் வாங்கலாம்! எப்படி?

இண்டிகோ புதிய சிஇஓ நியமனம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

