அமைச்சா் கே.என்.நேரு மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து
நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் கடந்த 2009-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ‘கலைஞா் அறிவாலயம்’ கட்டடத்துக்கான நிலம் தன்னிடம் இருந்து வாங்கப்பட்டதாகவும், பல கோடி மதிப்புள்ள நிலத்துக்கு மிகக் குறைந்த விலையே தரப்பட்டதாகவும் சீனிவாசன் என்பவா் காவல் துறையிடம் புகாா் அளித்தாா்.
இது தொடா்பாக திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சா் நேரு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சா் நேரு தரப்பில், இந்த வழக்கில் சமரசமாகச் சென்று விட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. புகாா்தாரா் தரப்பிலும் சமரச மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...