தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

சிங்கப்பூர் இலக்கியங்களை...

சென்னை பபாசி நடத்தும் புத்தகக் காட்சியில் சிங்கப்பூர் இலக்கிய அரங்கும் (548, 549) இடம் பெற்றுள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2023, 9:31 pm

DIN

சென்னை பபாசி நடத்தும் புத்தகக் காட்சியில் சிங்கப்பூர் இலக்கிய அரங்கும் (548, 549) இடம் பெற்றுள்ளது. அதில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களான ராம.கண்ணபிரான், பொன்.சுந்தரராஜ், பி.கிருஷ்ணன், கமலாதேவி, அரவிந்தன், நூர்ஜஹான், நா.ஆண்டியப்பன், பிரேமா மகாலிங்கம் உள்ளிட்ட 50 எழுத்தாளர்களின் நூல்களும் இடம்பெற்றுள்ளன.
 சிங்கப்பூர் எழுத்தாளர்களில் 20 பேர் பெண் எழுத்தாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் அரசு அமைத்துள்ள இந்த அரங்கின் மூலம் சிங்கப்பூர் இலக்கியத்தை தமிழக இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக அந்த நாட்டு தமிழ் எழுத்தாளர் பிரேமா மகாலிங்கம் கூறினார்.
 அவர் மேலும் கூறியதாவது: சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த தமிழ் எழுத்தாளர்களுடன், தமிழகம், இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும் இணைந்துதான் தற்போது நூல்களை வெளியிட்டு வருகின்றனர்.
 கடந்த 50 ஆண்டுகளுக்கும் முந்தைய அந்த நாட்டின் கலை, பண்பாடு உள்ளிட்ட வரலாறுகளை எழுத்தாளர்கள் பதிவு செய்யும் வகையில் நூல்கள் அமையவேண்டும் என சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் சிங்கப்பூரின் அந்தந்தப் பகுதிகள் சார்ந்த வட்டார பழக்கவழக்கம் உள்ளிட்ட பழைமையான வரலாறுகளைப் பதிவு செய்யும் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் தற்போது நூல்களாக அதிக அளவில் வெளியிடப்பட்டு வருகின்றன. சிங்கப்பூருக்கு செல்லத் திட்டமிட்டுள்ள தமிழக இளைஞர்களும், சிங்கப்பூரில் பணிபுரிந்து விட்டு தமிழகம் திரும்பியவர்களும் சிங்கப்பூர் இலக்கிய அரங்குக்கு அதிக அளவில் வந்து நூல்களை வாங்கிச் செல்கின்றனர்.
 சிங்கப்பூரில் 10-க்கும் குறைவான பதிப்பகங்களே உள்ளன. ஆகவே, அங்கு தனியாக புத்தகக் காட்சியை நடத்தமுடியாது. அதனால் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் நடைபெறும் புத்தகக் காட்சியில் சிங்கப்பூர் அரசு உதவியுடன் அரங்குகள் அமைத்து தொடர்ந்து சிங்கப்பூர் தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்துவோம். அதன் அடிப்படையில் அரசு உதவியுடன் சிங்கப்பூரில் எதிர்காலத்தில் சர்வதேச அளவிலான புத்தகக் காட்சி, தமிழ் இலக்கியத்தை முதன்மைப்படுத்தி நடத்த வாய்ப்பு ஏற்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.