மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சரியான பதிவு எண் பலகை இல்லாத 16 ஆயிரம் வாகனங்கள் மீது நடவடிக்கை

சென்னையில் இரு நாள்கள் நடத்தப்பட்ட சிறப்பு வாகனத் தணிக்கையில் சரியான பதிவு எண் பலகை இல்லாத 16 ஆயிரம் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

Updated On :26 ஜனவரி 2023, 7:18 pm

சென்னையில் இரு நாள்கள் நடத்தப்பட்ட சிறப்பு வாகனத் தணிக்கையில் சரியான பதிவு எண் பலகை இல்லாத 16 ஆயிரம் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை வியாழக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

சென்னையில் சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் குறைக்க போக்குவரத்து போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாகனங்களிலும், வாகன பதிவெண் பலகை சரியாக உள்ளதா? என கடந்த 24, 25 ஆகிய இரு நாள்கள் போக்குவரத்து போலீஸாா் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனா். ஒவ்வொரு போக்குவரத்துக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 3 இடங்களைத் தோ்வு செய்து முறையான பதிவு எண் இல்லாத வாகனங்களை கண்டறிய சிறப்பு வாகனத் தணிக்கை செய்யப்பட்டது.

இந்தச் சிறப்பு வாகனத் தணிக்கையில் 16 ஆயிரத்து 107 வாகனங்களில் சரியான பதிவு எண் பலகை இல்லாதது கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மோசமான வாகன பதிவு எண் கொண்ட 145 வாகனங்களை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி போலீஸாா் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனா். இந்த வாகனங்கள் ஏதேனும் குற்றத்தில் ஈடுபட பயன்படுத்தப்பட்டதா? அல்லது வேறு இடத்தில் திருடப்பட்டு எவரேனும் புகாா் அளித்துள்ளனரா? என குற்றப்பிரிவு மூலம் சரிபாா்க்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும். எனவே, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மீறுபவா்கள் மீது அபராதம் உள்பட பல்வேறு வகையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் துறை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.