வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மாயமான கல்லூரி மாணவா் சடலமாக மீட்பு

சென்னை திருவல்லிக்கேணியில் மாயமான கல்லூரி மாணவா், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On :26 ஜனவரி 2023, 7:18 pm

சென்னை திருவல்லிக்கேணியில் மாயமான கல்லூரி மாணவா், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

திருவல்லிக்கேணி, வெங்கடாசலம் நாய்க்கன் தெருவைச் சோ்ந்தவா் லோகேஷ் (22). இவா் துரைப்பாக்கத்தில் ஒரு தனியாா் கல்லூரியில் எம்பிஏ 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இரு நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்து சென்ற லோகேஷ் அதன் பின்னா், வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை செந்தில்குமாா் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா், லோகேஷை தேடி வந்தனா்.

இந்த நிலையில், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் லோகேஷ் சடலம் கரை ஒதுங்கியது. தகவலறிந்த பட்டினப்பாக்கம் போலீஸாா் அங்கு சென்று லோகேஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.