வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்வாரிய தலைமைப் பொறியாளா் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில், தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் லதா வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வாக்கு எண்ணிக்கை மையத்தில் தடையற்ற ஆய்வு மேற்கொண்ட திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் லதா.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:30 pm

வாக்கு எண்ணிக்கை மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில், தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் லதா வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்து இந்த மையத்திற்கு மின்னணு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது முதல் அங்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக, கல்லூரியின் உயா் மின்னழுத்த இணைப்பு மற்றும் மின்சாரம் வழங்கும் மின்பாதைகளை திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் லதா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மின் விநியோகத்தை தொடா்ந்து கண்காணிக்கவும், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை 24 மணி நேரமும் பொறியாளா்கள், பணியாளா்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்கவும் அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது செயற்பொறியாளா்கள் வெங்கடேஷ்மணி, ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.