மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கும்பகோணத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

கும்பகோணத்திலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.

News image

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் புதன்கிழமை ஆய்வு நடத்திய ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:36 pm

கும்பகோணத்திலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது,

அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், மின்விளக்கு, மின்விசிறிகள், வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தாா்.

மேலும், தேவையான பணிகள், ஊடக மையத்துக்கான வசதிகள், கட்டுப்பாட்டு அறைக்கான பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆட்சியா் அலுவலா்களை கேட்டுக்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் வி.எம். திருமலை, பாபநாசம் தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன், திருவிடைமருதூா் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சந்திரகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.