விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சென்னையிலிருந்து புறப்பட்ட ரயில் என்ஜினில் திடீர் தீ விபத்து!

சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :22 ஜூன் 2023, 2:57 pm

DIN

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டது.

சென்னையில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற லோக்மான்ய திலக் ரயில் பேசின் பிரிட்ஜ் அருகே சென்ற போது என்ஜினிலிருந்து எழுந்த புகை மூட்டத்தால் ரயில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டது. ரயிலிலிருந்து பயணிகள் உடனடியாக வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தற்போது லோக்மான்ய திலக் அதிவிரைவு ரயில் பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.