தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

சஞ்சு சாம்சனை யாருடனும் ஒப்பிட முடியாது: ரியான் பராக்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டன் ரியான் பராக் பேட்டி குறித்து...

News image

சஞ்சு சாம்சன், ரியான் பராக். - படங்கள்: ஐபிஎல்

Updated On :19 மார்ச் 2026, 4:02 pm IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டன் ரியான் பராக் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சனை யாருடனும் ஒப்பிட முடியாது எனக் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு மாறியதால், சிஎஸ்கேவில் இருந்த ரவீந்திர ஜடேஜாவும் சாம் கரணும் ராஜஸ்தான் அணிக்கு மாறினார்கள்.

முதல் ஐபிஎல் தொடரை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2022ல் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றது. காயம் காரணமாக கடந்த சீசனில் கேப்டனாக இல்லாமல் இருந்த சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக ரியான் பராக் தற்காலிக கேப்டனாக பணியாற்றினார்.

இந்நிலையில், சஞ்சு சாம்சன் இல்லாதபட்சத்தில் ரியான் பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் இல்லாத நிலையில் இது குறித்து ரியான் பராக் கூறியிருப்பதாவது:

சஞ்சுவின் பேட்டிங் தனித்துவமானது. அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. இது ‘விராட் கோலிக்கு மாற்றுவீரர் யார்?’ எனக் கேட்பது போலிருக்கிறது. இதற்குப் பதில் - வாய்ப்பில்லை என்பதுதான். அனைவரும் வெற்றிபெறவே விளையாடுகிறார்கள். ஒவ்வொருவரும் தனித்தனியான ஆற்றல்களைப் பெற்றுள்ளார்கள்.

கடந்த சீசனை கவனித்திருந்தால், கடைசி கட்ட ஆட்டங்களில் தோல்வியுற்றோம். கூடுதல் சுதந்திரமாக விளையாடினோமா? அல்லது தேவையான இடங்களில் பவுண்டரிகள் அடித்தோமா? அதேமாதிரி எதிரணியினரை அந்த மாதிரியான நேரங்களில் சமாளித்தோமா? இதையெல்லாம் சரியாக செய்தால் ஐபிஎல் போட்டிகளில் முன்னேறுவோம். கடந்த கால தவறுகளை எல்லாம் இந்தமுறை சரிசெய்வோம்.

சுழல், வேகப் பந்துவீச்சாளர்கள் சரியான கலவையில் இருக்கிறார்கள். அதேமாதிரி பேட்டிங்கில் வலது, இடது கை பேட்டர்களும் சமநிலையில் இருக்கிறார்கள். ஜடேஜாவிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது; அவர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்.

எந்தத் திடலாக இருந்தாலுமே சிலர் ஓரணிக்கும் சிலர் இரு அணிக்கும் ஆதரவு தெரிவிப்பார்கள். எப்படியானாலும் இந்த கவனச்சிதறல்களைப் புறக்கணித்து எங்களது ஆட்டதில் கவனமாக இருப்போம். எங்கு விளையாடினாலும் எங்களது வலுவான செயல்பாடுகளைத் தருவோம் என்றார்.

Summary

Rajasthan Royals (RR) captain Riyan Parag addressed questions regarding the absence of former skipper and star wicketkeeper-batter Sanju Samson and how the team plans to fill the void in the upcoming Indian Premier League (IPL) 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.