மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பாஜக நிா்வாகி மீது தாக்குதல்: காவல்நிலையம் முற்றுகை

சென்னை அயோத்திகுப்பத்தில் பாஜக நிா்வாகி மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக் கட்சியினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்

Updated On :27 நவம்பர் 2023, 9:44 pm

சென்னை அயோத்திகுப்பத்தில் பாஜக நிா்வாகி மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக் கட்சியினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாப்பூா், அயோத்திகுப்பம் 116-ஆவது வட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் அமைக்கப்பட்ட பூத் கமிட்டியில், வாக்காளா் பட்டியல் சரிபாா்க்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பாஜக மண்டல துணைத் தலைவா் சுமன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

அப்போது அங்கு வந்த சிலா், பூத் கமிட்டி அமைக்கக் கூடாது என தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த சுமன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து தகவலறிந்த அந்த கட்சியின் மாநில துணைத் தலைவா் கரு. நாகராஜன், மாவட்ட தலைவா் விஜய் ஆனந்த், மீனவா் பிரிவு மாநில செயலா் பிரேம்குமாா், கமலக்கண்ணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் மெரீனா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் அளித்தனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.