திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இருவருக்கு ரெட் கார்டு: ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பயர்ன் மியூனிக்!

சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் தோல்வியுற்ற ரியல் மாட்ரிட் அணி குறித்து...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் கொண்டாடும் பயர்ன் மியூனிக் அணி வீரர்கள். - ஏபி

Updated On :16 ஏப்ரல் 2026, 11:36 am IST

சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் இரண்டாம் கட்ட போட்டியில் 4-3 என பயர்ன் மியூனிக் அணி ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது. முன்னதாக, முதல் கட்ட ஆட்டத்தில் 2-1 என பயர்ன் மியூனிக் முன்னிலை வகித்தது.

மொத்தமாக பயர்ன் மியூனிக் 6-4 என்ற கோல் கணக்கில் 15 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.

பயர்ன் மியூனிக் அணி தனது சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியில் 2-3 என மியூனிக் பின் தங்கியிருந்தது. பின்னர், இரண்டாம் பாதியில் 89, 90+4ஆவது நிமிஷத்தில் லூயிஸ் டைஸ், ஒலிஸே சிறப்பான கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்கள்.

போட்டிக்குப் பிறகு 120ஆவது நிமிஷத்தில் நடுவருடன் வாதிட்ட அர்டா குலேருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. முன்னதாக, கமவிங்காவிற்கு 86ஆவது நிமிஷத்தில் இரண்டாவது எல்லோ (மஞ்சள்) கார்டு கொடுக்கப்பட்டு, ரெட் கார்ட்டாகி வெளியேற்றப்பட்டார்.

ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர், “இதெல்லாம் நம்பவே முடியவில்லை. இதற்கெல்லாமா இந்த ரெட் கார்டுகள் தருவார்கள்? எல்லாமே ரெட் கார்டுடன் முடிந்து விட்டது” என்றார்.

Summary

Bayern Munich beats Real Madrid 4-3 to reach Champions League semifinals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.