20 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கில் கால்பதிக்கும் ரியல் பெட்டிஸ்!
சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகியுள்ள ரியல் பெட்டிஸ் கால்பந்து அணி குறித்து...

சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகியுள்ள மகிழ்ச்சியில் ரியல் பெட்டிஸ் வீரர்கள், ரசிகர்கள். - படங்கள்: எக்ஸ் / ரியல் பெட்டிஸ்.
ஸ்பெயினில் விளையாடும் ரியல் பெட்டிஸ் எனும் நட்சத்திர கால்பந்து அணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கில் கால்பதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியல் பெட்டிஸ் கால்பந்து அணி செப்.1997ல் உருவாக்கப்பட்டது. சுமார் 118 ஆண்டுகள் பழமையான கால்பந்து கிளப். இந்த அணி 1934/35 சீசனில் லா லிகா கோப்பையை வென்றுள்ளது. இதுவரை சாம்பியன்ஸ் லீக்கில் கோப்பை வெல்லாமல் இருக்கிறது.
நேற்று (மே.12) எல்சியுடன் மோதியபோது ரியல் பெட்டிஸ் 2-1 என வென்றது. இந்த வெற்றியுடன் சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகியது உறுதியாகியுள்ளது.
கடைசியாக 2005-06 சீசனில் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடியது. 2026/27 சீசனில் விளையாடவிருக்கிறது. முதல்முறை கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த சீசனில் எர்னாண்டஸ் 10, எஸ்ஸால்ஸூலி 9, ஆண்டனி 8 கோல்களும் எஸ்ஸால்ஸூலி 8, ஆண்டனி 6 அசிஸ்ட்டுகளையும் செய்து அசத்தியுள்ளார்கள்.
Un equipo para la historia, una afición única.
— Real Betis Balompié ð´ð (@RealBetis) May 12, 2026
Lo hicimos ððððð ððððð.
¡SOMOS DE @ChampionsLeague! pic.twitter.com/ttxIFJK5Nj
இந்த வரலாற்று வெற்றியை ரியல் பெட்டிஸ் வீரர்களும் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.
ð»ð¼ððððððððð¼ð´. pic.twitter.com/I0ukOrvG6d
— Real Betis Balompié ð´ð (@RealBetis) May 12, 2026
Summary
Real Betis is back in the Champions League after a 20-year absence.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




