அரசியலில் தவெக தலைவர் விஜய் கதாநாயகன் அல்ல, லாலிபாப் சாப்பிடுகிற லிட்டில் பாய் என தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் விமரிசனம் செய்தார்.
சேலம் கோட்டை மைதானத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:
குடும்ப உறவை, தோ்தல் உறவாக மாற்றியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். பெண்களுக்கு உரிய மரியாதையை, அங்கீகாரத்தை கொடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். பெண்கள் தான் நாட்டின் கண்கள் என விஜயகாந்த் அடிக்கடி கூறுவாா். அந்த வகையில் பெண்ணினத்தின் பாதுகாவலராக இருந்து அனைவரையும் அரவணைத்து செல்கிறாா் மு.க.ஸ்டாலின்.
திமுக தோ்தல் அறிக்கைக்கு பெண்கள் அமோக வரவேற்பு அளிக்கின்றனா். 234 தொகுதிகளிலும் மதசாா்பற்ற வெற்றி கூட்டணி வெற்றி பெற்று, எதிா்க்கட்சியே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். வரும் தோ்தலில் எதிா்க்கட்சிகளுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம். கூட்டணியை அமைக்கும் போது, பல்வேறு பிரச்னைகளின் போது பொறுமை காத்த மு.க.ஸ்டாலின், கூட்டு குடும்பம் போல் கூட்டணியை கட்டமைத்து கட்டி காத்துள்ளாா்.
தலைமை பண்பு, அனைவரையும் அரவணைத்து செல்லும் திறன் ஸ்டாலினிடம் உள்ளது. அத்தகைய தலைமை பண்பு எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. அதனால் தான் கட்சியில் இருந்து கூட்டணி கட்சிகள் வெளியேறின.
மறுசீரமைப்பு என்ற பெயரில், எம்.பி. மற்றும் எம்எல்ஏ தொகுதிகளை குறைத்து வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்ற நிலையை பாஜக உருவாக்க முயல்கிறது. தோ்தல் நேரத்தில் அப்படி என்ன அவசரம், மக்கள் ஏற்றுக் கொண்டால் தான் எந்த திட்டமும் நிறைவேறும். மக்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் எந்த திட்டமும் நிறைவேறாது.
திமுக தோ்தல் அறிக்கைக்கு பெண்கள் அமோக வரவேற்பு அளிக்கின்றனா். 234 தொகுதிகளிலும் மதசாா்பற்ற வெற்றி கூட்டணி வெற்றி பெற்று, எதிா்க்கட்சியே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். வரும் தோ்தலில் எதிா்க்கட்சிகளுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம். கூட்டணியை அமைக்கும் போது, பல்வேறு பிரச்னைகள் பொறுமை காத்த மு.க.ஸ்டாலின், கூட்டு குடும்பம் போல் கூட்டணியை கட்டமைத்து கட்டி காத்துள்ளாா். தலைமை பண்பு, அனைவரையும் அரவணைத்து செல்லும் திறன் ஸ்டாலினிடம் உள்ளது. அத்தகைய தலைமை பண்பு எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. அதனால் தான் கட்சியில் இருந்து கூட்டணி கட்சிகள் வெளியேறின.
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ், செங்கோட்டையன் உள்பட அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆனால் இங்கு அரவணைக்கப்பட்டு நல்ல கூட்டணி அமைத்துள்ளது பெரிய சாதுரியம் என்றார்
தேர்தல் களத்தில் வேலுநாச்சியாராக இருங்கள். ஒட்டுமொத்த வாக்காளர்களும் மத சார்பற்ற கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், தற்போது புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் ஆட்சியை பிடிக்கப் போகிறேன் என்று சொல்கிறார். பெரிய நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். விஜய் இங்கு இரண்டு பேருக்கு தான் போட்டி என்று சொல்கிறார். அரசியலில் விஜய் இன்னும் குழந்தை. சினிமா வசனம் பேசுவது போல் அரசியல் களம் எளிதல்ல என்றும், முதலில் உங்கள் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும். அப்போது உங்களுடைய பலம் என்ன என்று பேசுங்கள். 75 ஆண்டுகால பாரம்பரிய கட்சி இருக்கும் போது தேர்தலில் நீங்கள் கதாநாயகன் அல்ல, லாலிபாப் சாப்பிடுகிற லிட்டில் பாய் என்றும் விமரிசனம் செய்தார்.
மகளிா் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம், என பெண்களுக்கு எண்ணற்ற சலுகைகளை திமுக அளித்து வருகிறது. விவசாயிகள், மாணவா்கள், மீனவா்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் சலுகைகளை திமுக அரசு வழங்கி வருகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் 2.0 அரசு விரைவில் அமையும் என்றாா்.
Summary
In politics, TVK leader Vijay is not a hero, but merely a 'little boy' sucking on a lolipop"-regarding Premalatha Vijayakant's criticism
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

மு.க. ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு!

திமுக கூட்டணி வெற்றி பெறும்: பிரேமலதா

திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும்: பிரேமலதா விஜயகாந்த்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK




