திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிட்டு 1 இடத்தில் வெற்றி பெற்றது.
இருப்பினும், திமுக இந்தத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில், முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் புதன்கிழமை (மே 7) மாலை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இதுபற்றி, பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டதாவது:
“சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து,முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
ஜனநாயக மரபையும் அரசியல் நாகரிகத்தையும் மதிக்கும் இந்த சந்திப்பு, மக்கள் நலனே முதன்மை என்ற நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில், தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் சுதீஷ் மற்றும் விஜயபிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Summary
DMDK General Secretary Premalatha Vijayakant has personally met with DMK President M.K. Stalin.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை!

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

பேரவையில் கட்சித் தலைவர்களின் துதிபாடல்தான் நடக்கிறது! பிரேமலதா

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் தொல். திருமாவளவன் சந்திப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




