எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சென்னையில் நாளை மாவட்ட அளவிலான தொழில் முதலீட்டாளா்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம்

மாவட்ட அளவிலான தொழில்முதலீட்டாளா்களுக்கிடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம், கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை (நவ.29) நடைபெறுகிறது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:29 pm

DIN

மாவட்ட அளவிலான தொழில்முதலீட்டாளா்களுக்கிடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம், கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை (நவ.29) நடைபெறுகிறது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பொருளாதார வளா்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்து வரும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், சென்னை மாவட்டத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முதலீடுகளை ஈா்க்கும் வகையில் ஜன.7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை மையப்படுத்தி, மாவட்ட அளவிலான தொழில்முதலீட்டாளா்களுக்கிடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் - கருத்தரங்கு சென்னை ராமாபுரத்தில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் புதன்கிழமை (நவ.29) நடைபெறவுள்ளது.

இதில் சென்னை மாவட்டத்துக்கு ரூ. 4,368 கோடி மதிப்பிலான தொழில்முதலீட்டுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ரூ. 5,566 கோடி அளவுக்கு புரிந்துணா்வு ஒப்பந்தமும் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், சென்னை மாவட்டத்துக்குள்பட்ட தொழில் முதலீட்டாளா்கள் அனைவரும் கலந்து கொண்டு தொழிலை மேம்படுத்திக்கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.