நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!

விபின் தாஸ் எழுதிய வாழ - 2 திரைப்படத்தின் வசூல் சாதனை குறித்து...

vaazha 2 film poster.

வாழ - 2 படத்தின் போஸ்டர். - படம்: இன்ஸ்டா / விபின் தாஸ்.

Published On :

மலையாளத்தில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றுவரும் வாழ - 2 திரைப்படம் தற்போது கேரளத்தில் மட்டுமே ரூ.100 கோடி வசூலை அதிவேகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

மலையாளத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற வாழ படத்தினை விபின் தாஸ் எழுத, ஆனந்த் மேனன் இயக்கியிருந்தார். குறைவான பட்ஜெட்டில் ஹிட் படமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் விபின் தாஸ் எழுத்தில் சவின் எஸ். ஏ இயக்கத்தில் வாழ - 2 கடந்த ஏப். 2 அன்று வெளியானது. பள்ளிகால கதையாக உருவான இது பலரிடமும் நகைச்சுவை, நெகிழ்ச்சிப் படமாக அமைந்ததால் இந்தாண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியது.

இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இதனால், விரைவிலேயே தமிழிலும் இப்படம் வெளியாகவுள்ளது எனவும் கூறப்படுகிறது.

இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்த நிலையில், தற்போது கேரளத்தில் மட்டுமே ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அண்மை காலமாக மலையாள சினிமா வணிக ரீதியாகவும் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது இந்தியளவில் கவனிக்க வைத்துள்ளது.

Summary

Vaazha 2 becomes Fastest ₹100 Crore at the Kerala Box Office!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.