நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

அதிவேகமாக 100 கோல்கள் பங்களிப்பு..! மெஸ்ஸியின் வரலாற்றுச் சாதனை!

எம்எல்எஸ் தொடரில் லியோனல் மெஸ்ஸியின் வரலாற்றுச் சாதனை குறித்து...

Messi wins Man of the Match.

ஆட்ட நாயகன் வென்ற மெஸ்ஸி. - படம்: எக்ஸ் / இன்டர் மியாமி

Published On :

எம்எல்எஸ் தொடரில் அதிவேகமாக 100 கோல்கள் பங்களித்து லியோனல் மெஸ்ஸி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதில் 59 கோல்கள், 41 அசிஸ்ட்களை செய்துள்ளார்.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த மெஸ்ஸி (38 வயது) இன்டர் மியாமி அணியில் கடந்த 2023 முதல் விளையாடி வருகிறார்.

டோரண்டோ எஃப்சி உடன் மோதிய இன்டர் மியாமி 4-2 என்ற கோல்கள் அடிப்படையில் வென்றது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி 2 அசிஸ்ட்டுகள், 1 கோல் அடித்து அசத்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இன்டர் மியாமி மொத்தமாக இதுவரை 64 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி 59 கோல்கள், 41 அசிஸ்ட்களை செய்து 100 கோல்கள் பங்களிப்பு செய்துள்ளார். மொத்தமாக அவரது சீனியர் கால்பந்து வாழ்க்கையில் 907 கோல்கள், 410 அசிஸ்ட்டுகளைச் செய்துள்ளார்.

முன்னதாக, எம்எல்எஸ் தொடரில் 95 போட்டிகளில் இந்த சாதனையை செபாஸ்டியன் ஜியோவினோவிடம் இருந்தது. மெஸ்ஸி 64 போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்.

இந்த வெற்றியுடன் இன்டர் மியாமி 22 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாமிடம் வகிக்கிறது.

Summary

Lionel Messi has 3 goal contributions to become fastest to 100 as Inter Miami tops Toronto 4-2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.