மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

அதிவேகமாக 900 கோல்கள்..! மெஸ்ஸி உலக சாதனை!

கால்பந்து வரலாற்றில் உலக சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி குறித்து...

Messi Poster for 900 Goals, MLS out

மெஸ்ஸி போஸ்டர். - படம்: எக்ஸ் / எம்எல்எஸ்

Published On :

கால்பந்து வரலாற்றில் மிகவும் குறைந்த போட்டிகளில் (அதிவேகமாக) 900 கோல்களை அடித்து லியோனல் மெஸ்ஸி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

குறைந்த போட்டிகள் மட்டுமல்லாமல் குறைந்த வயதிலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக ரொனால்டோ 900 கோல்களை நிறைவு செய்திருக்கிறார். அந்தப் பட்டியலில் மெஸ்ஸியும் இணைந்துள்ளார்.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த மெஸ்ஸி (38 வயது) அமெரிக்காவில் இருக்கும் இன்டர் மியாமி அணியில் விளையாடி வருகிறார். கான்காகேஃப் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நாஷ்வெல்லியுடன் விளையாடினார்.

இந்தப் போட்டியில் 7ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி எதிரணியினர் சூழ்ந்திருந்தும் மிகவும் குறுகிய இடத்தில் இருந்தே கோல் அடித்து அசத்தினார்.

இந்தப் போட்டி 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. கடந்த சீசனில் மதிப்புமிக்க வீரர் விருது, தங்கக் காலணி விருது வென்று அசத்தினார். இன்டர் மியாமி அணியும் முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

மெஸ்ஸி 900 கோல்களை 1,142 போட்டிகளில் அடித்துள்ளார். இதற்கு முன்பாக ரொனால்டோ 900 கோல்களை 1,236 போட்டிகளில் அடித்திருந்தார். மேலும், மெஸ்ஸி இந்த மைல்கல்லை 38 ஆண்டுகள் 268 நாள்களிலும் ரொனால்டோ 39 ஆண்டுகள் 213 நாள்களில் அடித்துள்ளார்கள்.

அதிவேகமாகவும் குறைந்த வயதிலும் மெஸ்ஸி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஆர்ஜென்டீனாவில் 115, பார்சிலோனாவில் 672, பிஎஸ்ஜியில் 32, இன்டர் மியாமியில் 81 கோல்கள் அடித்துள்ளார்.

கால்பந்து ரசிகர்களும் விளையாட்டு பிரபலங்கள் மெஸ்ஸிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்டர் மியாமியில் 2023ல் இணைந்த மெஸ்ஸி 2028வரை விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். இந்தாண்டு உலகக் கோப்பையுடன் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக முடிவெடுத்துள்ளார்.

Summary

For 10, it's 900: Inter Miami star Messi scores milestone 900th goal, joining Ronaldo in club

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.