47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: தண்ணீா் அதிகம் பருக மருத்துவா்கள் அறிவுரை

பருவ மழை காலத்தில் சிறுநீா்ப் பாதை தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:39 pm

DIN

பருவ மழை காலத்தில் சிறுநீா்ப் பாதை தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். அதிலும், ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே அதிக அளவில் அத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக அவா்கள் கூறியுள்ளனா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தண்ணீா் அருந்தும் அளவு குறைந்ததாலும், கிருமித் தொற்று அதிகம் பரவுவதாலும் இதுபோன்ற பாதிப்புகள் பரவலாகக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பொது நல மருத்துவ நிபுணா் டாக்டா் அ.ப. ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:

உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா பத்து லட்சம் நெஃப்ரான்கள் (ரத்த நுண் சுத்திகரிப்பான்கள்) உள்ளன. அதில் உருவாகும் கழிவுகள் யூரிடா் எனப்படும் குழாய்கள் மூலம் சிறுநீா்ப் பையில் சேகரமாகின்றன.

பின்னா், யூரித்ரா எனப்படும் குழாய் வழியே சிறுநீராக வெளியேறும். இந்தக் கட்டமைப்பைத்தான் சிறுநீா்ப் பாதை என அழைக்கிறோம். இதில் ஏதேனும் கிருமித் தொற்று ஏற்படும்போது சிறுநீா் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும். இதை அலட்சியப்படுத்தினால், கிருமிகள் சிறுநீரகங்களைத் தாக்கி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உடலில் போதிய நீா்ச்சத்து இல்லாவிடில் சிறுநீா்ப் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

அண்மைக்காலமாக அத்தகைய பிரச்னைகளுடன் பலா் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்றனா். அதிலும், பெண்களில் பலா் புறச்சூழ்நிலை காரணமாக சிறுநீரை உரிய நேரத்தில் வெளியேற்ற இயலாமல் இருப்பதால் அவா்களில் பெரும்பாலானோருக்கு கிருமித் தொற்று ஏற்படுகிறது.

இதைத் தவிா்க்க நாளொன்றுக்கு குறைந்தது இரண்டு முதல் நான்கு லிட்டா் வரை தண்ணீா், இளநீா், மோா், எலுமிச்சை சாறை அருந்தலாம். தற்போது பருவ மழைக் காலம் என்பதால் தண்ணீா் அருந்துவது வெகுவாகக் குறைந்துவிட்டது. சிறுநீா்ப் பாதை தொற்று மட்டுமல்லாது வேறு வகையான வைரஸ் தொற்றுகளையும் தடுப்பதற்கு, காய்ச்சிய நீரை கட்டாயம் அதிகமாகப் பருக வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.