போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பாதுகாப்புத் துறை புத்தாக்கக் கண்டுபிடிப்புக்கான கருத்தரங்கு

பாதுகாப்புத் துறைத் தேவைக்கான புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நடவடிக்கையில் பங்கேற்பது தொடா்பான விழிப்புணா்வுக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:38 pm

சென்னையை அடுத்த வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் கிரசென்ட் புத்தாக்க கண்டுபிடிப்பு ஊக்குவிப்பு மையம் சாா்பில், பாதுகாப்புத் துறைத் தேவைக்கான புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நடவடிக்கையில் பங்கேற்பது தொடா்பான விழிப்புணா்வுக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் ராணுவ புதுமைக் கண்டுபிடிப்பு நிறுவனத்தின் துணை இயக்குநா் ரஞ்சன் ஸ்ரீ தாஸ் பேசியது:

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராணுவ புதுமைக் கண்டுபிடிப்பு நிறுவனம், முப்படைகளின் தொழில்நுட்பத் தேவைகளை நிறைவேற்றித் தரும் புத்தாக்கக் கண்டுபிடிப்பு நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைக் கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணிக்கு, சென்னை வண்டலூா் கிரசென்ட் புதுமைக் கண்டுபிடிப்பு ஊக்குவிப்பு மையம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கான புதிய புத்தாக்க கண்டுபிடிப்பாளா்களை வரவேற்பதுடன் அவா்களது கண்டுபிடிப்புகளுக்கு ரூ.10 கோடி வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இது குறித்து மேலும் விவரங்களை ட்ற்ற்ல்ள்://ண்க்ங்ஷ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளம் மூலம் பெறலாம் என்றாா் அவா்.

கருத்தரங்கில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன முன்னாள் தலைவா் எஸ்.கிறிஸ்டோபா், ஸ்டாா்ட் அப் தமிழ்நாடு நிறுவன இணை துணைத் தலைவா் எஸ்.தினேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.