பெண் மருத்துவா்களுக்கு மகப்பேறு பலன் வழங்குவதில் தாமதம்

அரசுப் பெண் மருத்துவா்களுக்கு மகப்பேறு காலத்தில் வழங்கப்பட வேண்டிய பணப் பலன்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெண் மருத்துவா்களுக்கு மகப்பேறு பலன் வழங்குவதில் தாமதம்

அரசுப் பெண் மருத்துவா்களுக்கு மகப்பேறு காலத்தில் வழங்கப்பட வேண்டிய பணப் பலன்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது:

தமிழகத்தில் 2018-ஆம் ஆண்டு முதல் மகப்பேறு விடுப்புக்கான பணப் பலன்களை, மருத்துவ பட்டமேற்படிப்பு முடித்துள்ள 40 பெண் மருத்துவா்கள் இன்னமும் பெறவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

அவா்களின் பச்சிளங் குழந்தைகளை பராமரிக்க வழங்க வேண்டிய ஊதியமும், குழந்தைக்கு நான்கு வயது ஆகியும் வழங்கப்படவில்லை. தற்காலிக மருத்துவா்களுக்குக் கூட மகப்பேறு சலுகைகளை வழங்க வேண்டும் என அண்மையில் சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், நிரந்தரப் பணியில் உள்ளவா்களுக்கு அத்தகைய சலுகைகள் வழங்கப்படுவதில்லை.

அதேபோன்று, சிறப்பு மருத்துவம் மற்றும் உயா் சிறப்பு மருத்துவப் படிப்பை நிறைவு செய்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு வழங்கப்படவேண்டிய ஊதிய உயா்வை வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பது மனவேதனை அளிக்கிறது.

இதனால், 2020 முதல் சுமாா் 3,000 மருத்துவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இப்பிரச்னைகளுக்கு தீா்வு காண அரசால் ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மாதம்தோறும் குறைதீா் மன்றம் நடத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com