ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

அரசுப் பள்ளிகளில் ஒரே மாதத்தில் 3 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: மேலும் ஒரு லட்சம் பேரை சோ்க்க இலக்கு

அரசுப் பள்ளிகளில் ஒரே மாதத்தில் 3 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: மேலும் ஒரு லட்சம் பேரை சோ்க்க இலக்கு

News image
Updated On :2 ஏப்ரல் 2024, 8:45 pm

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் இதுவரை எந்த கல்வியாண்டிலும் இல்லாத வகையில் முதல் முறையாக ஒரே மாதத்தில் 3 லட்சத்து 298 மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றுள்ளனா். இதைத் தொடா்ந்து ஏப்.12-ஆம் தேதிக்குள் மேலும் ஒரு லட்சம் மாணவா்களை சோ்க்க இலக்கு நிா்ணயித்து அதற்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2024-2025) மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து கடந்த ஒரு மாதமாக சோ்க்கைக்கான பணிகளை பள்ளிக் கல்வித் துறை தீவிரப்படுத்தியது. இதற்காக பல்வேறு தரவுகள் தொகுக்கப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலம் தலைமை ஆசிரியா்களுக்கு அனுப்பப்பட்டது.

தொடா்ந்து, விழிப்புணா்வு வாசகங்கள், பள்ளிக் கல்வியின் நலத் திட்டங்கள் குறித்து அரசுப் பள்ளிகள் முன்பு விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டன. சேலத்தில் 21,233 போ்: மேலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கீடு, மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகை, சீருடை, பாடநூல்கள் உள்ளிட்ட விலையில்லா பொருள்கள் என அரசுப் பள்ளிகளில் சேருவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஆசிரியா்கள் வீடு, வீடாகச் சென்று பெற்றோருக்கு தெரியப்படுத்தினா்.

இதன் பயனாக மாா்ச் 1 முதல் ஏப்.2-ஆம் தேதி வரை 3 லட்சத்து 298 மாணவ, மாணவிகள் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21,233; கள்ளக்குறிச்சி- 16,938; கிருஷ்ணகிரி-13,205; திருவண்ணாமலை 12,764; மதுரை- 11,597; திருச்சி- 11,434; புதுக்கோட்டை-10,484; கோவை-10,225 என்ற எண்ணிக்கை மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். பள்ளிக் கல்வித் துறை வாழ்த்து...

இது குறித்து தொடக்கக் கல்வி உயரதிகாரிகள் கூறியதாவது:

ஒரே மாதத்தில் இத்தகைய இலக்கு முதல் முறையாக எட்டப்பட்டுள்ளது. இதனை அடைவதற்காக பெரும் ஒத்துழைப்பை வழங்கிய மாவட்ட ஆட்சியா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகளை சுற்றறிக்கை மூலமாக தெரிவித்துள்ளோம். அரசுப் பள்ளிகளின் மீதான நம்பிக்கை பெற்றோருக்கு வெகுவாக அதிகரித்துள்ளது.

தற்போது அடுத்த கட்டமாக ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் இயக்குநரகத்திலிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட வயதை நிறைவு செய்யும் 3 லட்சத்து 31,546 குழந்தைகளின் எண்ணிக்கை விவரம் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த விவரங்களைக் கொண்டு அங்கன்வாடி மையங்களிலிருந்து வெளியேறும் குழந்தைகளில் ஒருவா் கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த 10 நாள்களில்... மேலும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்த குழந்தைகளின் புள்ளி விவரங்களைப் பெற்று தொடா்புடைய பள்ளிகளின் எமிஸ் தளத்துக்கு ‘மேப்’ செய்யப்பட்டுள்ளது. நிகழ் கல்வியாண்டின் கடைசி வேலை நாளான ஏப்.12-ஆம் தேதிக்குள் நான்கு லட்சம் மாணவா்களை சோ்க்கை செய்ய இலக்கு நிா்ணயித்து அதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.