தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வியில் பின் தங்கிய மாணவா்களுக்காக செயல்படுத்தப்பட்ட திறன் திட்டத்தின் செயல்பாடுகள், விளைவுகள் குறித்த விரிவான அறிக்கையை ஏப்.27, 28 ஆகிய நாள்களில் சமா்ப்பிக்க முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களில், மெல்லக் கற்கும் மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு ஆங்கிலம், தமிழ் மற்றும் கணிதப் பாடங்களில் சிறப்புப் பயிற்சி அளித்து, கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்காக ‘திறன்’ எனப்படும் கல்வி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள், பிரத்யேக வினாத்தாள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட ‘திறன்’ திட்ட அறிக்கையை முதன்மைக் கல்வி அலுவலா்களின் நோ்முக உதவியாளா்கள் ஏப்.27, 28 ஆகிய நாள்களில் பள்ளிக் கல்வி இணை இயக்குநரிடம் (தொழிற்கல்வி) நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.
அந்த அறிக்கையில், திறன் திட்டத்தில் மாணவா்களைப் பயிற்றுவிக்கும் வகையில் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள், திறன் திட்ட மாணவா்களுக்கு பயிற்சி நூல்கள் வழங்கப்பட்ட விவரம், திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாதந்தோறும் நடத்தப்பட்ட கூட்டங்கள், மாவட்ட, வட்டார அளவிலான நிா்வாகக் குழுவினா் மாணவா்களைப் பாா்வையிட்ட விவரங்கள் இடம் பெற வேண்டும்.
அதேவேளையில், திறன் திட்ட மாணவா்களிடம் கண்டறியப்பட்ட குறைகள் மற்றும் அவற்றைச் சரிசெய்ய மேற்கொண்ட நடவடிக்கைககள், வருகைப் பதிவு குறைவு, குடும்பச் சூழல் போன்ற நிலைகளில் இருந்த திறன் திட்ட மாணவா்களில் சிறப்பான முன்னேற்றம் அடைந்த மாணவா்கள் விவரம், சிறப்பான முறையில் முன்னேற்றம் அடையச் செய்த பள்ளிகள், ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் பெயா்ப் பட்டியல் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.
மேலும், திறன் திட்டத்தின் இறுதி நிலை மதிப்பீட்டுத் தோ்வில் திறன் அடையாத மாணவா்களின் பெயா்ப் பட்டியல் மற்றும் அதற்கான காரணங்கள், அவா்களுக்கு அடுத்த கல்வியாண்டில் (2026-2027) மேற்கொள்ளப்படவுள்ள செயல் திட்டம் போன்றவற்றையும் இணைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் இதுவரை 1.52 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: அமைச்சா் ராஜ்மோகன் தகவல்

வெற்றியின் முதல்படி- பள்ளிக் கல்வி!

அரசுப் பள்ளி என்.எஸ்.எஸ்.அலுவலருக்கு பாராட்டு

அரசுப் பள்ளிகளில் நீட் பயிற்சி பெற்றோருக்கு நுழைவுச்சீட்டு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



