ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.60 கோடி பறிமுதல்

ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.60 கோடி பறிமுதல்

Updated On :2 ஏப்ரல் 2024, 9:04 pm

சென்னை: தமிழகத்தில் இதுவரையிலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 60 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளத இந்தத் தகவலை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவல்:

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த காலகட்டத்தில் உரிய ரசீதுகள், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.60.61 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.49 கோடி மதிப்பிலான மதுபான பாட்டில்களும், ரூ.73 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களும், ரூ.47.79 கோடி மதிப்பிலான ஆபரணங்களும், ரூ.14.62 கோடி மதிப்புடைய பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக அவற்றின் மதிப்பு ரூ.127.26 கோடி என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.