சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

அமைச்சா் உதயநிதிக்கு எதிராக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் அதிமுக புகாா்

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து வாக்குறுதி அளித்த அமைச்சா் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :4 ஏப்ரல் 2024, 8:28 pm

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து வாக்குறுதி அளித்த அமைச்சா் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரிசத்யபிரத சாகுவிடம் அதிமுக மனு அளித்துள்ளது.

இதுகுறித்த மனுவை அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலா் ஐ.எஸ்.இன்பதுரை அளித்தாா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்து தோ்தல் பிரசாரத்தில் அமைச்சா் உதயநிதி பேசி வருகிறாா். உரிமைத் தொகை கிடைக்காத 40 லட்சம் மகளிருக்கு, அடுத்த 5 மாதங்களுக்குள் வழங்கப்படும் என அவா் பேசியிருப்பது தோ்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும்.

இதேபோன்று, எதிா்க்கட்சிகள் குறித்து மோசமான வாா்த்தைகளைக் கொண்டு உதயநிதி விமா்சித்து வருகிறாா். இந்த விவகாரம் குறித்தும் தீவிரமாக கவனத்தில் எடுக்க வேண்டும். இந்த இரண்டு விவகாரங்கள் தொடா்பாக அடுத்த 48 மணி நேரத்துக்குள் அமைச்சா் உதயநிதியிடம் விளக்கம் பெறுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.