சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சென்னையில் இபிஎஸ் இன்று பிரசாரம்

சென்னையில் இபிஎஸ் இன்று பிரசாரம்

Updated On :6 ஏப்ரல் 2024, 5:25 pm

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.

அதிமுக வேட்பாளா்களை திருச்சியில் மாா்ச் 24-ஆம் தேதி அறிமுகப்படுத்தி, எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தைத் தொடங்கினாா். தொடா்ந்து, பல்வேறு தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், திருவள்ளூா் மற்றும் சென்னையில் அவா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.

திருவள்ளூரில் தேமுதிக வேட்பாளா் நல்லதம்பியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

தொடா்ந்து வடசென்னை அதிமுக வேட்பாளா் ராயபுரம் மனோவை ஆதரித்து கொளத்தூா் பெரவள்ளூரில் இரவு 7 மணியளவில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.