மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு: எடப்பாடி பழனிசாமி

மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் தெளிவான இலக்குடன் பணியாற்றி வருவதாக எடப்பாடி கே. பழனிசாமி கூறியது....

News image

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு - கோப்புப்படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 8:01 am

சென்னை: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் தெளிவான இலக்குடன் பணியாற்றி வருவதாக கட்சியின் தேர்தல் பிரசாரம் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

"நான் ஒரு விவசாயி; சுட்டெரிக்கும் வெயிலையும், கனமழையையும் எதிர்கொண்டவன். வெயிலையோ, மழையையோ கண்டு நாங்கள் அஞ்சுவதில்லை. தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு. எனவே, எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக நாங்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறோம். மக்களை நேரடியாகச் சந்தித்து, எங்கள் அரசின் சாதனைகளை விளக்கியும், திமுக அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டியும் வாக்குகளைச் சேகரித்து வருகிறோம். மாநிலம் முழுவதும் சிறப்பான தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது," என்று கூறினார்.

கனிமொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி குறித்து தான் வெளியிட்ட கருத்து தொடர்பாகப் பேசிய அவர், "அவருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்று நான் கூறவில்லை. கருணாநிதி குடும்பத்தில் மு.க. ஸ்டாலினுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, கனிமொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்ற எதார்த்தத்தை மட்டுமே நான் கூறினேன். நான் யாரையும் இழிவாகப் பேசவில்லை. அந்தக் குடும்பத்தில் கனிமொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை மட்டுமே நான் குறிப்பிட்டேன்," என்றார்.

தமிழகத் தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் சு. முத்துசாமிக்கு ஆதரவாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு நான்கு சாலைப் பகுதியில் கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார்.

வரவிருக்கும் தமிழகத் தேர்தலை முன்னிட்டு, பாஜக மகளிரணித் தலைவரும் கோவை வடக்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக, சாய்பாபா காலனி பகுதியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமை சாலை வலம் பிரசாரம் நடத்தினார்.

இந்தப் பிரசாரத்தின் போது, ​​பாஜக மற்றும் அதிமுக கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள், இவ்விரு தலைவர்களையும் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை அணிவித்து வரவேற்றனர்.

இந்த தேர்தலை பொருத்தவரை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே அதிதீவிரப் போட்டி நிலவும் நிலையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் என்று பார்க்கும்போது, எந்த ஒரு அணிக்கும் பெரும்பான்மை கிடைப்பது கடினமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. ஆளும் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் தீவிரம் காட்டி வருகிறது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தேர்தல் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கான ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது; வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

ADMK General Secretary Edappadi K Palaniswami on Thursday exuded confidence over his party's election campaign, saying they are working with a clear aim to return to power in the state Assembly polls.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.