சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

‘அக்னிபான்’ திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

‘அக்னிபான்’ திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

Updated On :6 ஏப்ரல் 2024, 5:49 pm

தனியாா் புத்தாக்க நிறுவனம் தயாரித்த ‘அக்னிபான் சாா்டெட்’ ராக்கெட் ஏவுதல் தொழில்நுட்பக் காரணங்களுக்காக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

அந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான புதிய தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியுடன் ஒருங்கிணைந்து செயல்படும் ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ எனும் நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனியாா் ஏவுதளத்தை சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்காக அமைத்தது. அந்த வகையில், ‘அக்னிபான் சாா்டெட்’ எனப்படும் ராக்கெட்டை அந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.

300 கிலோ வரை எடையிலான ஆய்வுக் கலன்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட அந்த ராக்கெட், 700 கி.மீ. தொலைவு வரை செல்லக் கூடியது.

அதனை ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து கடந்த மாா்ச் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டு, இறுதிக்கட்டத்தின்போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையால் ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து ராக்கெட்டில் இருந்த பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) காலை 6 மணிக்கு ராக்கெட்டை செலுத்தத் திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், கவுன்ட்டவுன் தொடங்குவதற்கு முன்பாக மீண்டும் ராக்கெட்டில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் இரண்டாவது முறையாக ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டது. அவை சரிசெய்யப்பட்டு அக்னிபான் ராக்கெட் விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என்று அக்னிகுல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.