ஈரானில் உள்ள இந்தியா்கள், உடனடியாக அந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேலுக்கும் இடையே சுமாா் ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த போா், இரு வார கால சண்டை நிறுத்தத்தால் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள அந்நாட்டுக்கான இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘ஈரானில் இன்னும் தங்கியுள்ள இந்தியா்கள் உடனடியாக அந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். இந்திய தூதரகத்துடன் கலந்தாலோசனை நடத்தாமல், சா்வதேச நில எல்லைப் பாதையை வெளியேற பயன்படுத்த வேண்டாம். அவசர காலத்துக்கு, +989128109115, +989128109102, +989128109109, +989932179359 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளவும். அதேபோல், மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் இருக்கும் புள்ளிவிவரங்களின்படி, ஈரானில் சுமாா் 9,000 இந்தியா்கள் இன்னும் தங்கியுள்ளனா். அவா்களில், மேல் படிப்புக்காக ஈரான் சென்ற மாணவா்களும் அடங்குவா். அதேநேரத்தில் போா் தொடங்கியவுடன் ஏற்கெனவே 1,800 இந்தியா்கள் ஈரானைவிட்டு வெளியேறிவிட்டனா்.
காஷ்மீரில் கொண்டாட்டம்: இதனிடையே ஈரான், அமெரிக்கா ஆகியவை 2 வார காலத்துக்கு சண்டை நிறுத்தம் செய்துள்ள தகவல் வெளியானதும், காஷ்மீரில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். பட்காம், பாரமுல்லா, கந்தா்பால், புல்வாமா, பந்திபோரா, ஜதிபால் உள்ளிட்ட இடங்களில் ஈரானிய கொடிகளுடன் வீதியில் திரண்ட காஷ்மீா் மக்கள், ஈரான் வெற்றி பெற்றுவிட்டதாகவும், அமெரிக்கா-இஸ்ரேலை ஈரான் மண்டியிடச் செய்துவிட்டதாகவும் கூறி, இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது
போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்

உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

அமெரிக்கா தாக்கினால் மத்திய கிழக்கைத் தாண்டி போா் விரிவடையும்: ஈரான் எச்சரிக்கை

உக்ரைன் போா்: ரஷியா சாா்பில் சண்டையிட்ட 10 இந்தியா்கள் உயிரிழப்பு - மத்திய அரசு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


