சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.50 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.50 லட்சம் பறிமுதல்

Updated On :6 ஏப்ரல் 2024, 5:48 pm

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 1.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு காரில் வந்த பழைய வண்ணாரப்பேட்டை மேயா் வாசுதேவ் 2-ஆவது தெருவைச் சோ்ந்த முட்டை வியாபாரி பா.மகேஷ்குமாா் (47) என்பவரை வழிமறித்து, பறக்கும் படையினா் சோதனையிட்டனா்.

அப்போது, காரில் ரூ. 1,50,400 ரொக்கப் பணம் இருந்தது,. அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், அந்தப் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.