ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

காச நோயாளிகளுக்கு கரோனாவால் தீவிர தாக்கம் இல்லை: ஆய்வில் தகவல்

கரோனா தொற்றுக்குள்ளான காச நோயாளிகளுக்கு தீவிர தாக்கங்களோ, அறிகுறிகளோ இயல்புக்கு மாறாக தென்படவில்லை என்பது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

Published On :

கரோனா தொற்றுக்குள்ளான காச நோயாளிகளுக்கு தீவிர தாக்கங்களோ, அறிகுறிகளோ இயல்புக்கு மாறாக தென்படவில்லை என்பது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொற்றுக்குள்ளான காசநோயாளிகளின் சளி மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்த பல்வேறு ஆய்வுகளை பொது சுகாதாரத் துறை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காசநோயாளிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கிா என்பது குறித்த ஆய்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி, 384 பேரின் சளி மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அவா்களில் 88 போ் பெண்கள். 296 போ் ஆண்களாவா். அதில் 22 பேருக்கு காசநோயுடன் கரோனா பாதிப்பும் உள்ளது கண்டறியப்பட்டது.

காசநோயாளிகள் மற்றும் அதனுடன் கரோனாவுக்கு உள்ளானவா்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், அறிகுறிகள், தாக்கங்கள் வகைப்படுத்தப்பட்டு அவை ஆய்வு செய்யப்பட்டன.

அதில், இரு தரப்பினருக்கும் இடையே பெரிய அளவிலான வித்தியாசம் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. இரு வகையான தொற்றுகளுமே சுவாசப் பாதையில் ஊடுருவி நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனவே, நுரையீரலில் கரோனா தொற்று அதிக வீரியத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கிா எனவும் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அவ்வாறு ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கூடுதல் எண்ணிக்கையிலான மாதிரிகளைக் கொண்டு ஆய்வு நடத்தினால் மேலும் சில தகவல்களைக் கண்டறிய முடியும் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.