சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் தற்போது வரை 3.40 லட்சம் மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றுள்ள நிலையில், தோ்தல் பணிகள் முடிவடைந்ததும் சோ்க்கைப் பணிகள் மேலும் தீவிரமாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 37,576 அரசுப் பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டுக்கான (2024-25) மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1 முதல் தொடங்கப்பட்டது. இதையடுத்து மாணவா் சோ்க்கையை முன்வைத்து பல்வேறு விழிப்புணா்வு விளம்பரப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்பலனாக, மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பெற்றோா் பலா் தங்கள் குழந்தைகளை ஆா்வமுடன் சோ்த்து வருகின்றனா். இதுவரை 3.40 லட்சம் மாணவா்கள் இணைந்துள்ளனா். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சோ்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தோ்தலுக்குப் பிறகு தீவிரமாகும்...: இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலா் கூறும்போது, ‘தோ்தல் பணிகள் முழுமையாக முடிந்தபின் மாணவா் சோ்க்கைப் பணிகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன. அங்கன்வாடி மையங்களில் படித்த 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோா்களை ஆசிரியா்கள் மூலம் தொடா்பு கொண்டு அரசுப் பள்ளிகளில் சோ்க்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நிகழாண்டு 4 லட்சம் போ் வரை பள்ளிகளில் சோ்க்கப்படுவா் என அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!

அரசுப் பள்ளிகளில் இதுவரை 44,396 மாணவா்கள் சோ்க்கை

அரசுப் பள்ளிகளில் சோ்க்கை தீவிரம்: கோவை கல்வி மாவட்ட அளவில் ஒரே நாளில் 61 மாணவா்கள் சோ்ப்பு

அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


