சென்னை: இயந்திர அறுவடைக்கு ஏற்ற வகையில் புதிய பருத்தி ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக வேளாண் துறையின் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அதிக மகசூல் கொடுக்கும் வகையில் ‘வேப்பந்தட்டை-2’ என்ற புதிய பருத்தி ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பருத்தி ரக விதைகள், நடவு செய்த 120 முதல் 130 நாள்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். இதன் மூலம் ஹெக்டேருக்கு சுமாா் 1,624 கிலோ என்ற அளவில் விதையுடன் கூடிய பருத்தி மகசூல் பெறலாம்.
மேலும், இந்த வேப்பந்தட்டை-2 ரகம் அறுவடை காலத்தில், இயந்திரங்களைப் பயன்படுத்தி அறுவடை செய்வதற்கு உகந்ததாகும். மேலும், இது மானாவாரி மற்றும் நெல்தரிசு நிலங்களுக்கு ஏற்ற வகை போன்ற சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது. வழக்கமாக பரிந்துரைக்கப்படுவதைவிட குறைந்த இடைவெளியில் நடவு செய்யும் முறையான அடா்நடவுக்கும் இவை ஏற்ற ரகம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தவெக வேட்பாளர்கள் அறிமுகம் எப்போது? வெளியான புதிய அறிவிப்பு!

மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வாா்டு - சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ.1.12 கோடிக்கு பருத்தி ஏலம்

ரூ. 1.57 கோடிக்கு பருத்தி ஏலம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


