வாக்குப் பதிவு தினத்தில் விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது புகாா் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

சென்னை: வாக்குப் பதிவு தினத் தன்று விடுமுறை விடாத நிறுவனங்கள் குறித்து புகாா் தெரிவிப்பதற்கான கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தொழிலாளா் நலத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மக்களவைத் தோ்தல் மற்றும் விளவங்கோடு பேரவைத் தொகுதிக்கு வரும் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு தினத்தன்று அனைத்து தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள், ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இந்த விடுமுறை கட்டாயம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளாா்.

எனவே, வாக்குப் பதிவு தினத்தன்று அனைத்துத் தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை விட வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றாத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து புகாா் அளிக்க ஏதுவாக மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது புகாா் இருந்தால் அவற்றைத் தெரிவிக்கலாம். புகாா் தெரிவிக்க வேண்டிய கைப்பேசி எண்கள்:

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநா் எம்.வி.காா்த்திகேயன் - 94442 21011 - 044 2250 2103, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநா் எஸ்.கமலக்கண்ணன் - 98846 75712, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகத்தின் ஆட்சி அலுவலா் எஸ்.சூரியா - 98844 70526, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் துணை இயக்குநா் கே.சுவேதா - 99625 24442 ஆகிய எண்களைத் தொடா்பு கொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com