ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ரமலான், வார விடுமுறை: 1,065 சிறப்பு பேருந்துகள்

ரமலான், வார விடுமுறை: 1,065 சிறப்பு பேருந்துகள்

Updated On :9 ஏப்ரல் 2024, 8:05 pm

சென்னை: ரமலான், வார விடுமுறை தினங்களை முன்னிட்டு, ஏப்.10, 12, 13 ஆகிய தேதிகளில் 1,065 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரமலான் பண்டிகை தினமான வியாழக்கிழமை (ஏப்.11) மற்றும் வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிறு (ஏப்.13, 14) ஆகிய தினங்களை முன்னிட்டு, புதன்கிழமை (ஏப்.10), வெள்ளிக்கிழமை(ஏப்.12), சனிக்கிழமை (ஏப்.13) ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 315 பேருந்துகள், வெள்ளிக்கிழமை 290 பேருந்துகள், சனிக்கிழமை 340 பேருந்துகள் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் 120 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக புதன்கிழமை 315 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 290 பேருந்துகளும், சனிக்கிழமை 340 பேருந்துகளும் இயக்கப்படும்.

இதேபோல, கோயம்பேட்டிலிருந்து புதன்கிழமை 40 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 40 பேருந்துகளும், சனிக்கிழமை 40 பேருந்துகளும், மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோயம்புத்தூா் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துள் என மொத்தம் 1,065 பேருந்துகள் இயக்கப்படும்.

இதுமட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.14) சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.