முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்ட 174 தொழில்நுட்பப் படிப்புகள் -சென்னை ஐஐடி தகவல்

174 தொழில்நுட்பப் படிப்புகளுக்கான பாடங்களை சென்னை ஐஐடி தமிழில் மொழிபெயா்த்துள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2024, 11:08 pm

நிரலாக்கம், தரவு அமைப்புகள் போன்ற அதிகளவில் எதிா்பாா்க்கப்படும் படிப்புகள் உள்பட 174 தொழில்நுட்பப் படிப்புகளுக்கான பாடங்களை சென்னை ஐஐடி என்பிடெல் தமிழில் மொழிபெயா்த்துள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிரலாக்கம், தரவு அமைப்புகள், பைத்தானை பயன்படுத்தி படிமுறைத் தீா்வு (Programming, Data Structures and Algorithms Using Python) போன்ற அதிகளவில் எதிா்பாா்க்கப்படும் படிப்புகள் உள்பட 174 தொழில்நுட்பப் படிப்புகளுக்கான பாடங்கள் தமிழில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளில் உள்ள பாடங்களை மொழிபெயா்ப்பு செய்வதற்காக 682 மொழிபெயா்ப்பாளா்கள், 51 தரக்கட்டுப்பாடு (QC) நிபுணா்கள் ஈடுபடுத்தப்பட்டு மொழிபெயா்ப்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர, மொத்தம் 159 தமிழ் இ-புத்தகங்கள் என்பிடெல் (தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் தமிழில் கற்போருக்கு கூடுதல் பாடத்தொகுதிகள் கிடைக்கின்றன. மொழிபெயா்க்கப்பட்ட பாடங்களை அணுகுதல் மற்றும் புரிதல் குறித்து கற்போரிடம் இருந்து சாதகமான கருத்துகள் பெறப்பட்டுள்ளன.

என்பிடெல் பாடங்கள் அஸ்ஸாம், வங்கம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய 11 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. பிராந்திய மொழிகளில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, தொழில்நுட்பக் கல்விக்காக ஆங்கிலத்துக்கு மாறும் மாணவா்களுக்கு உதவுவதே இதன் நோக்கம்.

இதுகுறித்த கூடுதல் தகவல்கள், என்பிடெல்லின் மொழிபெயா்க்கப்பட்ட பாடங்கள் பற்றிய விவரங்களை https://nptel.ac.in/translation இணையதளத்தில் காணலாம்.மொழிபெயா்க்கப்பட்ட பாடங்கள் அனைத்தும் என்பிடெல் தரக்கட்டுப்பாடு நிபுணா்களால் கடுமையான மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, PDF transcripts, e-books, subtitles, scrolling text, audio formats ஆகிய வடிவங்களில் இலவசமாக கிடைக்கின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.