இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 15 புதிய தொழில்நுட்பப் படிப்புகள்!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 15 புதிய தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகம் செய்யப்படுவது குறித்து..

For Students

அரசுப் பாலிடெக்னிக் படிப்பு - ENS

Published On :

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 15 புதிய தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இந்தப் படிப்புகளில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாலிடெக்னிக் மாணவர்களும் இணைந்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிகளில் வரும் 2026 - 27ஆம் கல்வியாண்டில், தேர்வு செய்யப்பட்ட மேம்படுத்தப்பட் திறன் சான்றளிப்புப் படிப்புகள் அறிமுகமாகவிருக்கின்றன என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநர் விசாகன் கூறியுள்ளார்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன தொழில்துறை நடைமுறைகளில் மாணவர்கள் திறன்களைப் பெற உதவும் வகையில் மொத்தம் 15 தொழில்துறை சார்ந்த படிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்தப் படிப்புகளில் புதுமை மற்றும் வடிவமைப்பு சிந்தனை, தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் மேம்பாடு, தயாரிப்பு சரிபார்ப்பு மற்றும் பகுப்பாய்வு, ஆட்டோமொபைல் பராமரிப்பு, மேம்பட்ட ஆட்டோமொபைல் தொழில்நுட்பம், பேட்டரி மற்றும் மின்சார வாகன தொழில்நுட்பம், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், சிஎன்சி மில்லிங் மெஷின் புரோகிராமிங், சிஎன்சி லேத் புரோகிராமிங், சேர்க்கை உற்பத்தி செயல்முறை மற்றும் தொழில்நுட்பம், வெல்டிங் தொழில்நுட்பம், மேம்பட்ட ஓவியம் தொழில்நுட்பம், செயல்முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன், ரோபாட்டிக்ஸ் புரோகிராமிங் - பொருள் கையாளுதல் மற்றும் மேம்பட்ட பிளம்பிங் ஆகியவை அடங்கும்.

இந்தப் படிப்புகள் பாடத்திட்டத்தில் விருப்பப் பாடங்களாகவோ அல்லது கூடுதல் சான்றிதழ் திட்டங்களாகவோ இணைக்கப்படும். இந்தப் பாடங்களில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகள் இரண்டும் வழங்கப்படும்.

இந்த படிப்புகள் மூலம் சுமார் 36 ஆயிரம் மாணவர்கள் ஆண்டுதோறும் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த படிப்பில், பாலிடெக்னிக் படித்தவர்கள், ஐடிஐ மாணவர்கள், டிகிரி முடித்தவர்களும் இணைந்து படிக்கலாம். தொழில்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்த படிப்புகளை கற்பிப்பார்கள் என்றும், இதனால், கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Summary

Regarding the introduction of 15 new technical courses in government polytechnic colleges..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.