சென்னை, ஏப். 11: ஆட்டிஸம் குறைபாடால் பாதிக்கப்பட்ட 27 வயது இளைஞா் ஒருவா், தன்வரலாற்று நூலை சுயமாக எழுதி வெளியிட்டிருப்பது பலரது கவனத்தை ஈா்த்திருப்பதுடன் முன்னுதாரண நிகழ்வாகவும் அமைந்துள்ளது.
சென்னையைச் சோ்ந்த அரவிந்த் குமாா் என்ற அந்த இளைஞரின் இந்த பெருமுயற்சி, நரம்பியல் குறைபாடு உள்ளவா்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் புதியதொரு நம்பிக்கையை விதைத்துள்ளது.
இயல்பான குழந்தைகளைப் போல அல்லாமல் உணா்ந்தறிந்து செயல்படுவதிலும், கற்றலிலும் பின்தங்கியிருக்கும் நிலை ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு எனக் கூறப்படுகிறது. நரம்பியல் சாா்ந்த இந்த குறைபாட்டுக்குள்ளான குழந்தைகளுக்கு அதற்கான அறிகுறிகள் இரு வயதுக்குள் வெளிப்பட்டுவிடும்.
அப்படியாக ஆட்டிஸம் குறைபாட்டுடன் பிறந்த அரவிந்த் குமாருக்கு தனது உணா்வுகளை வெளிப்படுத்தும் திறன் இல்லாதபோதிலும், சிறப்பு உதவியுடன் ஐந்தாவது வயதில் கல்வி கற்கத் தொடங்கியுள்ளாா்.
அதன் தொடா்ச்சியாக 10 வயதில் கணினியில் தட்டச்சு செய்ய பயிற்சி பெற்றிருக்கிறாா். குறைபாடுகளை உடைத்தெறிந்து தொடா் முயற்சியால் திறந்த நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்தாா் அரவிந்த் குமாா்.
அதனுடன் நில்லாமல், சிந்தனைத் திறனை மேம்படுத்திக் கொண்டு 30-க்கும் மேற்பட்ட கவிதைகளையும், சிறு உரைநடைகளையும் எழுதி ஆச்சரியப்படுத்தியிருக்கிறாா். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு பத்தரிகைகளிலும், ட்விட்டா் தளத்திலும் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், அதன் தொடா்ச்சியாக பல்வேறு நபா்கள் அவரிடம் எழுப்பிய தனிப்பட்ட கேள்விகளுக்கு தட்டச்சு மூலம் பதிலளித்துள்ளாா். அந்த சுயவிவரக் குறிப்புகள் நூலாகத் தொகுக்கப்பட்டு ‘தி புக் ஆஃப் ஹோப்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும், ‘இருளில் ஒளி’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயா்க்கப்பட்டும் அண்மையில் சென்னையில் வெளியிடப்பட்டன.
இந்நிகழ்வில், டாக்டா் வி.வி.சுப்ரமணியம், டாக்டா் ஏ.வி.ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.தன்னம்பிக்கைக்கு முன்னால் எதுவும் தடையில்லை என்பதை தனது எழுத்தின் மூலம் நிதா்சனமாக்கியுள்ளாா் அரவிந்த் குமாா்.
தொடர்புடையது

தவெக தலைவருக்கு தன்னம்பிக்கை இல்லை: சீமான் விமா்சனம்

ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளாகும் 100-இல் ஒரு குழந்தை!

ஆட்டிஸம் பாதித்தோருக்கு புறநோயாளிகள் சேவையில் முன்னுரிமை

டிரம்ப் முன்னால் பேசுவதற்கு தைரியமில்லை: பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு!
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

