ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி அணி, பிளே-ஆஃபுக்கு தகுதிபெற்றது.
அந்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான விளிம்பு நிலையில் சென்னை இருக்க, அதன் போட்டியாக கருதப்பட்ட ஈஸ்ட் பெங்கால் எஃப்சி 1-4 கோல் கணக்கில் பஞ்சாப் எஃப்சியிடம் புதன்கிழமை தோற்றது. இதனால், சென்னைக்கான கடைசி ஆட்டம் எஞ்சியிருக்கும் நிலையிலேயே அந்த அணி பிளே-ஆஃபுக்குள் வந்தது.
பிளே-ஆஃப் தேதிகள் அறிவிப்பு: நடப்பு சீசனின் லீக் சுற்று ஆட்டங்கள், வரும் 15-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், பிளே-ஆஃப் சுற்று 19-ஆம் தேதி தொடங்குகிறது.
அதன் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் 19, 20 தேதிகளிலும், அரையிறுதியின் முதல் பகுதி 23, 24 தேதிகளிலும், 2-ஆவது பகுதி 28, 29 தேதிகளிலும் நடைபெறவுள்ளன. இறுதி ஆட்டம் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான இடம் விரைவில் அறிவிக்கப்படும் என போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்தனா்.
மோகன் பகான் வெற்றி: இதனிடையே, லீக் சுற்றில் வியாழக்கிழமை ஆட்டத்தில் மோகன் பகான் 4-0 கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியை சாய்த்தது. அந்த அணிக்காக ஹெக்டா் யஸ்டே (17’), மன்வீா் சிங் (51’), அனிருத் தாபா (54’), அா்மாண்டோ சாடிகு (59’) ஆகியோா் கோலடித்தனா்.
தொடர்புடையது

கோவாவின் கடைசி நேர கோலால் வெற்றியை தவற விட்ட சென்னையின் எஃப்சி!

வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் சிஎஃப்சி: இன்று கோவாவுடன் மோதல்

தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை!

வெற்றியுடன் தொடங்க சென்னையின் எஃப்சி முனைப்பு: இன்று மும்பையுடன் மோதல்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


