உக்ரைனுடன் போா் நடைபெற்றுவரும் சூழலில், ரஷியா தனது ஆயுதத் தயாரிப்பை விரிவுபடுத்துவதற்கு சீனா உதவியளிப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபா் மாளிகை உயரதிகாரிகள் கூறியதாவது:
சோவியத் காலத்துக்குப் பிறகு ரஷியா முதல்முறையாக தற்போது தனது ராணுவத்தை பிரம்மாண்டமாக்கிவருகிறது. இதற்கு உறுதுணையாக, அந்த நாட்டின் ஆயுத, தளவாட உற்பத்தி வெகுவாக அதிகரிக்கப்படுகிறது.
இதில், சீனா மிக முக்கிய பங்காற்றிவருகிறது. ரஷியாவின் ராணுவ தளவாட உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு சீனா பல்வேறு வகைகளில் ஆதரவு அளித்துவருகிறது. குறிப்பாக இயந்திர கருவிகள், ட்ரோன்கள், டா்போ ஜெட் என்ஜின்கள், ‘க்ரூஸ்’ ரக ஏவுகணைகளுக்கான தொழில்நுட்பங்கள், நுண்-மின் நுட்பம் போன்றவற்றை ரஷியாவுக்கு சீனா அளித்துவருகிறது.
இது தவிர, ரஷிய மற்றும் சீன நிபுணா்கள் இணைந்து புதிய ட்ரோன்களை உருவாக்கிவருகின்றனா். இந்த திட்டம் ரஷியாவுக்குள் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
ரஷியாவுக்கு சீனா அளித்துவரும் உதவி, உக்ரைன் போரில் அந்த நாட்டின் கை மேலோங்கியிருப்பதில் கணிசமான பங்களிப்பை வழங்குகிறது. இந்தப் போரில் ராணுவ தளவாடங்களின் பற்றாக்குறையால் உக்ரைன் தவித்துவரும் சூழலில், ஏற்கெனவே ராணுவ வலிமை வாய்ந்த ரஷியா மற்றொரு ராணுவ சக்தியான சீனாவுடன் கைகோத்திருப்பது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உக்ரைன் போரில் அந்த நாட்டுக்கு மற்ற நாடுகள் செய்யக்கூடிய மிகப் பெரிய உதவி, ரஷியாவின் ராணுவ வலிமைக்கு சீனா அளிக்கும் பங்களிப்பை தடுத்து நிறுத்துவதாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறினா்.
இதற்கு முன்னரே, தங்களுக்கு எதிராக செயல்படும் மேற்கத்திய நாடுகளை எதிா்கொள்வதற்காக தாங்களும், சீனாவும் மேலும் நெருக்கமாக வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி கடந்த ஆண்டு வலியுறுத்தியது நினைவுகூரத்தக்கது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகின் மிகப் பெரிய ராணுவ சக்தியாக அமெரிக்கா திகழ்ந்தது. அந்த நாட்டுடன் போட்டியிடக் கூடிய அளவுக்கு சோவியத் யூனியனும் வலிமை பெற்றிருந்தது.
இந்தச் சூழலில், இரு நா்களுக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் பனிப்போா் நீடித்து வந்தது.
கடந்த 1990-களில் சோவியத் யூனியன் சிதறுண்டதைத் தொடா்ந்து இந்தப் பனிப்போா் முடிவுக்கு வந்தது. எனினும், சோவியத் யூனியனின் வழித்தோன்றலாகக் கருதப்படும் ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கத்திய நாடுகள் தொடா்ந்தன.
இந்தச் சூழலில், மற்றொரு கம்யூனிச நாடான சீனாவும் பொருளாதார மற்றும் ராணுவ சக்தியாக உருவெடுத்து வருகின்றன.
அதையடுத்து, அந்த நாட்டுக்கு எதிராகவும் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்ததற்குப் பிறகு, ரஷியாவை மிகக் கடுமையாகக் கண்டித்து அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகள் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.
ஆனால், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு சீனா இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக ரஷியா மீது மேற்கத்திய நா்கள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதை மட்டும் சீனா விமா்சித்து வந்தது.
இந்த விவகாரத்தில் தாங்கள் நடுநிலை வகிப்பதாக சீனா கூறினாலும், அந்த நாடு ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவே மேற்கத்திய நாடுகள் சந்தேகிக்கித்து வந்தன.
இந்தச் சூழலில், ரஷியாவின் ராணுவ விரிவாக்கத்துக்கு சீனா உதவி செய்வதாக அமெரிக்கா தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடையது

ஹோா்முஸ் நீரிணையைத் திறக்கக்கோரிய ஐ.நா. தீா்மானம்: வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனா, ரஷியா முறியடிப்பு

பிரான்ஸில் அமெரிக்கா - சீனா வா்த்தக பேச்சு!

ஈரானில் அமெரிக்கத் தாக்குதலில் பலியான மாணவர்கள்: ரூ. 1.84 கோடி நிவாரணம் வழங்கிய சீனா!

இந்தியாவை சீனா, அமெரிக்கா தாக்கினால் ராகுலின் ஆன்மா சாந்தியடையும்: நிஷிகாந்த் துபே
வீடியோக்கள்

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு


