வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இந்தியாவை சீனா, அமெரிக்கா தாக்கினால் ராகுலின் ஆன்மா சாந்தியடையும்: நிஷிகாந்த் துபே

ராகுல் காந்தி இந்தியாவை அழிக்கச் சதி செய்கிறார்..

News image
நிஷிகாந்த் துபே- dps
Updated On :12 மார்ச் 2026, 9:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவை சீனா, ரஷியா, அமெரிக்கா தாக்கினால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆன்மா சாந்தியடையும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

பிரதமர் மோடி டொனால்ட் டிரம்ப், விளாடிமிர் புதின், ஜி ஜின்பிங்கை அவமதிக்க வேண்டும் என்று ராகுல் விரும்புகிறார். இந்த மூவரையும் அவமதித்தால் ராகுல் காந்தியின் ஆன்மா சாந்தியடையும்.

ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனா இணைந்து இந்தியாவைப் புறக்கணிக்கும்போது, இந்தியாவைத் தாக்கும்போது கூட அவரது இதயம் திருப்தி அடையும். ஏனெனில் ஜார்ஜ் சோரோஸின் இந்தியாவை உடைக்கும் திட்டம் வெற்றி பெற்றிருக்கும் என்று கூறினார்.

நான் உறுதியாகச் சொல்கிறேன். இந்தியாவை அழிக்கச் சதி உள்ளதாகவும், அந்த சதியில் ராகுல் காந்தியும் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது இந்தியா அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பிய முடிவையும் விமர்சித்தார்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ​​ராஜீவ் காந்தி இந்திய ராணுவத்தை வலுக்கட்டாயமாக அங்கு அனுப்பினார். இதன் விளைவாக, முதல்முறையாக நாட்டின் பிரதமர் அந்த நாட்டு வீரர்களால் தாக்கப்பட்டார். இவ்வளவு கீழ்த்தனமான, ஒழுக்கமற்ற மற்றும் பொறுப்பற்ற எதிர்ப்பை நாடு ஒருபோதும் பார்த்ததில்லை.

எல்பிஜி கிடைப்பது குறித்த குறிப்பிடுகையில், பல அண்டை நாடுகள் பற்றாக்குறையை எதிர்கொண்டாலும், இந்தியா மிகச் சிறந்த நிலையில் உள்ளது.

எல்பிஜி ஒரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமானதாக கருதப்பட்டது. இன்று, 13 கோடி மக்களுக்கு எரிவாயு இணைப்புகளை வழங்குவதன் மூலம், அதே வசதி ஏழைகளுக்கும் கிடைப்பதைப் பிரதமர் உறுதி செய்துள்ளார்.

இதுபோன்ற முயற்சிகளை ஆதரிப்பதற்குப் பதிலாக, எதிர்க்கட்சிகள் அரசியலில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

summary

Congress leader Rahul Gandhi's soul will be at peace when China, Russia and the US attack India, BJP MP Nishikant Dubey said on Thursday while accusing the leader of opposition in the Lok Sabha of being involved in a conspiracy to "break" India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.