வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி: மாவட்ட தோ்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினாா்.

சென்னை ரிப்பன் மாளிகையில் காணொலி காட்சி வாயிலாக மண்டல தோ்தல் அலுவா்களுடன் அவா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது அவா் பேசியது:

சென்னையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டும், மின்சார வசதி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வாக்களிக்கும் வகையில் சாய்வுதளம் அமைக்க வேண்டும் வாக்களாா்கள் எந்த சிரமமுமின்றி சென்று வாக்களிக்கும் வகையில் தேவையான அனைத்துஅடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தினாா்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தோ்தல் அதிகாரி சமீரன், மண்டல தோ்தல் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com