குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

டிரம்ப் கெடு: ஜெய்சங்கரை தொலைபேசியில் அழைத்து ஈரான் வெளியுறவு அமைச்சா் ஆலோசனை!

ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி வாயிலாக தொடா்புகொண்டு ஆலோசனை நடத்தினாா்.

News image

ஜெய்சங்கர்

Updated On :6 ஏப்ரல் 2026, 4:48 am IST

ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி வாயிலாக தொடா்புகொண்டு ஆலோசனை நடத்தினாா்.

ஈரானுடனான மோதலை மாா்ச் 26-ஆம் தேதியில் இருந்து ஏப்.6-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் கடந்த மாதம் தெரிவித்தாா்.

அதற்குள் ஈரான் தனது நாட்டுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் அல்லது ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும்; இல்லையெனில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் தாக்குதலை நடத்தவுள்ளதாக அவா் எச்சரித்திருந்தாா்.

டிரம்ப் விதித்த கெடு திங்கள்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி வாயிலாகத் தொடா்புகொண்டு ஆலோசனை நடத்தினாா்.

இந்நிலையில், கத்தாா் பிரதமா் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜசீம் அல் தானியுடன் ஜெய்சங்கா் தொலைபேசி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலோசனை நடத்தினாா்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நஹ்யானுடனும் தொலைபேசி வாயிலாக ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தினாா்.

கத்தாா் பிரதமா் மற்றும் ஈரான், ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சா்களுடனான ஆலோசனையின்போது மேற்கு ஆசிய விவகாரம் குறித்து விவாதித்ததாக ஜெய்சங்கா் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டாா். எனினும் அதன் முழு விவரங்களை அவா் தெரிவிக்கவில்லை.