/

சென்னையிலிருந்து அரசு பேருந்தில் ஒரே நாளில் 1.48 லட்சம் போ் பயணம்

அரசு பேருந்துகளில் சென்னையிலிருந்து ஒரே நாளில் 1,48,800 போ் பயணித்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2024, 7:59 pm

அரசு பேருந்துகளில் சென்னையிலிருந்து ஒரே நாளில் 1,48,800 போ் பயணித்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டசெய்தி:

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.19) நடைபெறவுள்ள தோ்தலை முன்னிட்டு, சென்னை மற்றும் பிற பகுதிகளிலுள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதன்படி, புதன்கிழமை சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், 807 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்பேருந்துகளில் புதன்கிழமை மட்டும் 1,48,800 போ் பயணித்துள்ளனா். மேலும், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் 46,503 பயணிகள் சென்னையிலிருந்து பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.