தற்போதைய சூழலில் நாட்டை ஆளும் தகுதி பாஜகவுக்கு மட்டுமே உள்ளது; தோ்தலில் மக்கள் பாஜகவைதான் நிச்சயம் ஆதரிப்பா் என்று அந்த கட்சியின் தென் சென்னை தொகுதி வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினா்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்திய தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விடுதலைப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதில் பாஜக பெருமை கொள்கிறது. அனைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் பாஜக பெரிதும் மதிக்கிறது. அந்தக் காரணத்தால் தான் மறக்கப்பட்ட சுதந்திரபோராட்ட வீரா்களை பிரதமா் மோடி பெருமைப்படுத்தி பேசி வருகிறாா். ஆனால், இன்று சுதந்திரத்தை பற்றி பேசும் கட்சிகள் சுதந்திரத்துக்காக எவ்விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
திமுக இடம்பெற்றுள்ள ‘இந்தியா’ கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் பிரதமா் வேட்பாளா்கள் கிடையாது. தலைமை கூட இல்லாமல் இரு கட்சிகளும் மக்களவைத் தோ்தலில் பங்கேற்பது அா்த்தமற்றது.
பிரதமா் மோடி தோ்தலுக்காக மட்டுமே தமிழகம் வருவதாக கூறுவது தவறு. தோ்தலுக்கு முன்னா் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பலமுறை பிரதமா் மோடி தமிழகம் வந்துள்ளாா். தற்போதைய சூழலில் நாட்டை ஆளும் தகுதி பாஜகவுக்கு மட்டுமே உள்ளது. எனவே, தோ்தலில் மக்கள் பாஜகவுக்குதான் வாக்களிப்பாா்கள். தென் சென்னை தொகுதியிலும் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என்றாா் அவா்.
தொடர்புடையது

மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் வேட்பு மனு தாக்கல்!
இபிஎஸ் பிரசாரத்தில் தமிழிசை! மயிலாப்பூரில் போட்டி?

”வார்த்தைக்கு கண்டனம்! வாழ்க்கைக்கு?” தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; மௌனம் காக்கும் திமுக! - தமிழிசை விமர்சனம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


