மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன் தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன்,
என்னுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் போது தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் உடன் இருந்தார். யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை இந்த சூழலே சொல்கிறது.
தற்போது சூரியன் மறைந்து இருக்கிறது. மழை வந்து கொண்டிருக்கிறது தாமரை மலரும். அதுதான் எங்களின் தாரக மந்திரம், இயற்கையே சூரியனை மறைய வைத்து மழையை வரவழைத்து தாமரையை மலர வைத்திருக்கிறது.
தாமரையோடு இலையும் சேர்ந்து மலரும். மயிலாப்பூரில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது இந்த தொகுதியில் அதிக வாக்குகளைப் பெற்ற உள்ளேன். வாரத்தில் இரண்டு நாள் எப்போதும் மயிலாப்பூரில் இருப்பேன்.
மயிலாப்பூர் த. வேலு திமுக வேட்பாளர் வேலுவை வேல் வைத்து அப்புறப்படுத்துவோம். மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போக்குவரத்து நெரிசல் , குடிசை மக்களுக்கு வீடு கட்டி அளித்ததில் ஊழல் என பல்வேறு பிரச்னைகள் உள்ளது. அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பேன் மீனவர்கள் பிரச்னை தீர்ப்பதற்குத் தனியாக ஒரு துறையை நாங்கள் வைத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
Summary
Tamilisai Soundararajan, the BJP candidate contesting in the Mylapore Assembly constituency, filed her nomination papers with Returning Officer Vijayalakshmi, accompanied by Union Minister Piyush Goyal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக அமைச்சர்களுக்கு தெளிவான சிந்தனை இல்லை! தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்! | TVK | BJP

கோயில் நிலங்கள் சூறையாடப்படுவது வேதனை அளிக்கிறது: தமிழிசை சௌந்தரராஜன்

சுயநலத்துக்காக ராஜிநாமா செய்த எம்எல்ஏ-க்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பாஜக

மேக்கேதாட்டு விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம்: தமிழிசை சௌந்தரராஜன்
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



