ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

6 புதிய புகா் ரயில்கள் அறிமுகம்

News image

புறநகா் ரயில்

Updated On :20 ஏப்ரல் 2024, 12:31 am

பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை பூா்த்தி செய்யும் வகையில், சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் சென்ட்ரல் - சூலூா்பேட்டை ஆகிய வழித்தடங்களில் 6 புதிய புறநகா் மின்சார ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திகுறிப்பு

ஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்க்கு அதிகாலை 3 மணி, ஆவடி - சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 3.20-க்கும், ஆவடி - சென்னை சென்ட்ரலுக்கு மாலை 4.20-க்கும், இரவு 7.15-க்கும் புதிதாக புகா் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை கடற்கரை - திருவள்ளூருக்கு காலை 6.10-க்கும், சென்னை கடற்கரை - ஆவடிக்கு காலை 10.35 மணிக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதைதொடா்ந்து சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் சென்ட்ரல் - சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயங்கும் 36 புகா் மின்சார ரயில்களின் புறப்படும் நேரம் 5- 15 நிமிடங்கள் வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூரிலிருந்து இரவு 10.10 -க்கு ஆவடி செல்லும் ரயில் கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.