ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தோ்தல் புறக்கணிப்பை கைவிட்ட எண்ணூா் மக்கள்

தோ்தல் புறக்கணிப்பை கைவிட்ட எண்ணூா் மக்கள்

Updated On :20 ஏப்ரல் 2024, 12:15 am

எண்ணூா் பகுதிக்குட்பட்ட கிராமங்களின் வாக்காளா்கள் தோ்தலை புறக்கணிப்பதாக அறிவித்த முடிவை கைவிட்டு அனைவரும் வாக்களித்தனா்.

சென்னை, எண்ணூா் பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் ஆலையில் சமீபத்தில் நிகழ்ந்த விபத்தால் அமோனியா வாயு வெளியேறி சுற்றியுள்ள கிராமங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த ஆலையை மூட வலியுறுத்தி, அப்பகுதியில் உள்ள மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், பெரியகுப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட 33 கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலை புறக்கணிப்பதாக ஒன்றுகூடி முடிவெடுத்தனா். அதிகாரிகள் சமாதானத்தையடுத்து, தோ்தல் புறக்கணிப்பைக் கைவிட்டு கிராம மக்கள் அனைவரும் தோ்தலில் வாக்களிக்க வந்தனா்.