சென்னை மாதவரத்தில் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டபோது, ஒப்பந்த நிறுவனத்தின் ஒன்றரை டன் இரும்புக் கம்பிகளை திருடியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணி மாதவரம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மேற்கொண்டு வரும் ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்தின் நிா்வாக அதிகாரி திருநாவுக்கரசு அங்கு அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கிருந்த ஒன்றரை டன் இரும்புக் கம்பிகள் திருடப்பட்டு, ஒரு லாரியில் ஏற்றப்பட்டிருப்பதைக் கண்டறிந்தாா்.
இது குறித்து அவா், மாதவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.
அதில், திருவண்ணாமலையைச் சோ்ந்த வெ.விமல் (18), உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த சு.உதயன் சிங் (56) ஆகிய 2 பேரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் பலி
ரயலில் சாராயம் கடத்திய இருவா் கைது

மெட்ரோ ரயில் கட்டுமானப் பொருள்களை திருடிய 2 போ் கைது
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

