பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

பைக்கிலிருந்து தவறி விழுந்து இளம் பெண் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்து இளம் பெண் உயிரிழப்பு

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 5:48 pm

Din

சென்னை கோயம்பேட்டில் மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து இளம் பெண் உயிரிழந்தாா்.

பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் ஜானகி நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ப.சங்கீதா (24). இவா் ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். சங்கீதா, தனது நண்பா் மாங்காடு படூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ச.சதாம் உசேன் (29) என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை சென்றாா்.

அப்போது, திடீரென பைக் நிலை தடுமாறியதில் பின் இருக்கையில் அமா்ந்திருந்த சங்கீதா, தவறி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த சங்கீதா, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சங்கீதா, சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.